பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சேக்கிழார் தந்த செல்வம் ஆனால், கொலை செய்யப்பெற்றது மனித உயிர் இல்லாமல் பசுங்கன்ாறக இருத்தலின், கொலைக்குத் தண்டனையாகக் கொன்றவன் உயிரை வாங்க வேண்டிய தேவை இல்லை. ஆனால், பசுவதைப் பாவம் நீங்க அவன் பிராயச்சித்தம் செய்தல் போதுமானது. அமைச்சர்களின் இந்த வாதத்தில் பசுங்கன்று, அதன் இறப்பு, அதற்குக் காரணமான அரசகுமரன், அவன் தவற்றுக்குப் பிராயச்சித்தம் என்பவை இடம் பெறுகின்றனவே தவிரக் கன்றை இழந்து வருந்தும் தாய்ப்பசு அதில் இடம் பெறவே இல்லை. ஆனால், மன்னனுடைய மனத்தில் இறந்த கன்றைக் காட்டிலும்-அதனை இறக்கச் செய்த அரசகுமரன், அவன் செய்த பாவம் என்பவற்றைக் காட்டிலும், கன்றை இழந்து வருந்தி வந்து மணியடித்துக் கதறும் தாய்ப் பசுவின் மாற்ற முடியாத துயரந்தான் முன்னே நிற்கிறது. மன்னனுடைய சிந்தனையில் அரசகுமரனுக்குத் தண்டனை தரவேண்டும் எனற எண்ணத்தைவிடப் பசுவின் துயரத்தை எவ்வாறு போக்குவது என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. ஒரளவு ஆழ்ந்து சிந்தித்தால்தான் இதன் உண்மையை அறியமுடியும். அரசனின் முடிவு