பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுநீதி என்னும் வழிகாட்டி 97 அமைச்சர்கள் அஞ்சியது போலவேதான் அமைந்தது. அதாவது அரசகுமரனைத் தேர்க்காலில் கிடத்தித் தேரை அவன்மீது ஒட்டிவிட்டான். ஆனால், அரசகுமரனின்மேல் தேரைச் செலுத்திய செயலுக்கு, அரசன் அமைச்சர் என்ற இருவரும் கற்பித்த காரணம் வெவ்வேறாகும். மனிதச் சட்டத்தின்படி பசுவதை செய்தவனைக் கொல்லவேண்டிய தேவை இல்லை. அதனால்தான் அமைச்சர்கள் பொன்று வித்தல் மரபன்று என்று திரும்பத் திரும்பக் கூறினர். ஆனால் மன்னன் அவ்வாறு ஏன் மைந்தனைக் கொன்றான்? அவன் கண்ட அறச் சட்டம் மைந்தனைக் கொல்லவேண்டும் என்று கட்டளை இட்டதா? அதுவும் இல்லை. பின்னர் ஏன் அவ்வாறு செய்தான் அறச் சட்டமும் பசுங் கன்றுக்குப் பதிலாக மைந்தன் உயிரை வெளவ வேண்டும் என்று கூறவில்லைதான். ஆனால், வேறு ஒன்றை விதித்தது அவ் அறச்சட்டம். பிறிதின் நோய் தன் நோய் போல் . 'எவ்வாறாயினும் பசுவின் துயரத்தைப் போக்க வேண்டும்; இன்றேல் அப்பசுவின் துயரைத் தன் துயர்போல் போற்ற வேண்டும் என்று அறச்சட்டம் கூறிற்று. துயரத்தைப் போக்க முடியாத மன்னன் அத்துயரைத் தன் துயர்போல் போற்றி அனுபவிக்க முற்பட்டு விட்டான். அது எவ்வாறு இயலும்