பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சேக்கிழார் தந்த செல்வம் துயரைப் பங்கிடுவதற்காகவும், அறச்சட்டத்தின் வழிநிற்பதற்காகவும் மைந்தனைத் தேர்க்காலில் கிடத்தினான் மன்னன். இதுவே அவன் முடிவுக்குக் காரணம் என்பதை . "-இனி இதுவே செயல்; இவ்ஆன் மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும்இது தனதுறு பேரிடர் யானும் தாங்குவதே தருமம்' என்னும் சேக்கிழாரின் வரிகள் விளக்கமாக அறிவுறுத்துகின்றன. இவ்வுண்மையை அறியாவிடின் சாதாரண மக்கள் பேசுவதுபோல் உயிருக்காக உயிரை வாங்கினான் மனுவேந்தன் என்ற முறையில் மிகச் சாதாரணமான ஒருவனாக அவனை ஆக்கிவிட நேரிடும். சட்டம் என்ற பெயரிலும் தண்டனை என்ற பெயரிலும் ஓர் உயிரை வாங்கும் சாதாரன மனிதனாக மனுவை நினைத்துவிடக் கூடாது என்பதே சேக்கிழாரின் கருத்தாகும். வடநெறிச் செல்வாக்கும் தமிழர் நெறியும் திருத்தொண்டத் தொகையில் காணப்பெறாத இவ்வரலாற்றை பாடுவதன்மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்குமாறு செய்கிறார் சேக்கிழார். நீதிநூல் என்ற பெயரில் மனுவால் வழங்கப்பட்ட