பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/11

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



1. சேக்கிழார் தந்த செல்வம்

சேக்கிழார் தந்த செல்வம் என்று கூறியவுடன், 'இவர் யார்? எத்தகைய செல்வத்தை இவர் நமக்குத் தந்தார்' என்ற எண்ணம் சிலர் மனத்திலாவது தோன்றக் கூடும். திருத்தொண்டர்புராணம் என்ற நூலைத்தான் இப்பெரியார் நமக்குத் தந்து சென்றுள்ளார். 'அந்த நூலைச் செல்வம் என்று கூறுவது பொருந்துமா?’ என்று சிந்தித்தால், ஓர் உண்மை விளங்கும். செல்வம் என்றால் என்ன? வீடு, மனை, நிலம், காசு, பணம், பொன் முதலியவற்றைத்தான் செல்வம் என்ற சொல்லில் பலரும் அறிந்திருக்கிறார்கள். என்றாலும், இவை அனைத்தும் பொருட்செல்வம் என்ற ஒன்றில் அடங்கிவிடும். இவற்றை அல்லாமல் வேறு செல்வங்களும் உண்டா என்று வினவினால், பல செல்வங்கள் உண்டு என்று நம் முன்னோர் கூறியுள்ளனர். அருட்செல்வம், மக்கட்செல்வம், கேள்விச்செல்வம் என்று பலவகைச் செல்வங்கள் உண்டு. கேள்விச்செல்வத்தையே வள்ளுவப்பேராசான் செவிச்செல்வம் என்று கூறுகிறார். இன்னும் ஒரு படி மேலே சென்று பொருட்செல்வம் முதலியவற்றினும்,