பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சேக்கிழார் தந்த செல்வம் தரும் கல்வெட்டைப் பார்த்தால் வியப்புத் தோன்றாமல் இராது. "திருநாவுக்கரையன் என்ற அகோரசிவனும், திருஞானசம்பந்தன் என்ற ஈசானனும்’ என்று அக்கல் வெட்டுப் பேசுகிறது. அதாவது திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தன் என்ற பெயர்களை உடைய ஒதுவார்கள் பெருவுடையார் கோயிற் பணிக்கு நியமிக்கப்படும்பொழுது, வடவர் முறையில் தீட்சை செய்விக்கப்பெற்று, அகோரசிவன், ஈசானானன் என்ற தீட்சா நாமங்களைப் பெற்ற பிறகே, கோயிற் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பதைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. தமக்கு முற்பட்ட சோழர் வரலாற்றையும், அவர்கள் கல்வெட்டுக்களையும் நன்கு கற்றறிந்த சேக்கிழாருக்கு, ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். தமிழகத்தில் தோன்றிய மூவர்முதலிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்களை, திருக் கோயிலில் ஒதும் தமிழ் ஒதுவார் ஒருவர்கடிட வடவர் கூறும் தீட்சை பெற்று, தீட்சா நாமத்தையும் பெற்ற பின்னரே பாட அனுமதிக்கப்பெற்றனர் என்ற ஒரு செய்தி சேக்கிழாரை உலுக்கியிருக்க வேண்டும். "திசை அனைத்தின் பெருமையெலாம் தென்திசையே வென்றுஏற” என்றும், "அசைவு இல் செழும் தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறை வெல்ல' (1927) என்றும் திருஞானசம்பந்தர் புராணத்தில் சேக்கிழார்