பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சேக்கிழார் தந்த செல்வம் இராசராசன் பரம்பரையில் வந்த இரண்டாம் குலோத்துங்கனுக்கு, தமிழன் கண்ட அறம் யாது? தமிழருடைய பண்பாடு என்ன, முந்தைய தமிழ் மன்னர்கள் மனு ஸ்மிருதியைப் பின்பற்றவில்லை, தமிழர் கூறும் அறத்தையே பின்பற்றினர் என்பதை எடுத்துக் காட்டவே திருநகரச் சிறப்பில், இக் கதையைப் பயன்படுத்தினார் சேக்கிழார் என்ற பேருண்மையை அறிந்துகொண்டால், அறுபத்துமூவர் வரலாற்றோடு தொடர்பில்லாத இக்கதையைச் சேக்கிழார் ஏன் பாடினார் என்பதை அறிய முடியும். தமிழ்ப் பண்பாடு, தமிழர்கண்ட பக்தி நெறி, தமிழர் கண்ட மறைமொழி (மந்திரங்கள்) என்பவற்றை நிலைநிறுத்த ஏழாம் நூற்றாண்டில் புரட்சி செய்தார் ஞானசம்பந்தர். அதை முற்றிலும் மறந்துவிட்டு, வேற்றார் ஆதிக்கத்தில் புகுந்த இடைக் காலச் சோழர்களை எடுத்துக் காட்டவே, மனு. நீதியின் கதையைச் சேக்கிழார் பயன்படுத்தினார் என்பது உறுதிப்படும். @ó@@@