பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சுந்தரர் திருத்தொண்டத்தொகையில் இல்லாததைப் பாடியது ஏன்? பெரியபுராணக் காப்பியம் சுந்தரர் வரலாற்றுடன் தொடங்குகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய திருத் தொண்டத்தொகையில் காணப்படாத வரலாறு இது. ஏனென்றால், அப்பதிகத்தைப் பாடியவரே இவர் தான். அத்தனை பேருக்கும் அடியேன் என்று பாடிய பெருந்தகை இவர்தான். இவருடைய வரலாற்றைத் தொடங்கின காரணத்தால் பலரும் இந்தக் காப்பியத் தலைவர் இவரே என்று கருதிவிட்டனர். சுந்தரர் காப்பியத்லைவர் அல்லர்; தொண்டுதான் காப்பியத் தலைமை இடத்தைப் பெற்றுள்ளது என்று முன்னரே குறிக்கப்பெற்றுள்ளது. அப்படியானால், திருத் தொண்டத்தொகை பட்டியலில் உள்ள அடியவர்கள் பற்றி பாடிவிட்டால், சுந்தரருக்கு அங்கு இடம் இல்லாமல் போகும். அதுமட்டுமன்று. இந்தத் திருத்தொண்டத் தொகை, யாரால், எப்பொழுது, எதற்குப் பாடப்பெற்றது என்ற வினாக்களுக்கும் விடை இல்லாமல் போய்விடும், சுந்தரர் வரலாற்றைச் சொல்லிக்கொண்டு வருகிறபொழுது, இன்ன இடத்தில், இன்ன காரணத்திற்காகத் திருத்தொண்டத் தொகை பாடினார் என்று கூறுவது பொருத்தமாக