பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சேக்கிழார் தந்த செல்வம் இருக்கும். அதன்பிறகு, அவர்பாடிய முறையிலேயே ஏனைய வரலாறுகளைப் பாடுவது பொருத்தமாக இருக்கும். இந்தக் காரணம் போக, சுந்தரர் வரலாற்றைச் சேக்கிழார் முதலில் பாடியதற்கு மற்றொரு முக்கியக் காரணம் உண்டு. இந்த உலகம் உய்வதற்காக அடியார்களின் பெருமையை முதன் முதலாக வரிசைப்படுத்திப் பாடியவர் சுந்தரர் அல்லரோ? இத்தகைய பேருபகாரம் செய்த அப்பெருமானுக்கு நன்றி பாராட்டும் வகையில் அவர் வரலாற்றை முதலில் சொல்லத் தொடங்குகிறார். அந்தப் பெருமானை வணங்குவதற்கு இந்தப் பிறவி பேருதவி செய்வதால் தம்முடைய பிறப்புக்கே ஒரு வணக்கத்தைச் செலுத்துகிறார் சேக்கிழார் நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத்து ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்துத் தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன் வாசமலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்' - (பெ. பு:- 270) என்று பாடுவதால், சுந்தரர்மாட்டுச் சேக்கிழார் கொண்டிருந்த பக்தியின் ஆழம் விளங்கும். ஏனைய அடியார்களிடம் கொண்டிருந்த அன்பைவிடச்