பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் 105 சுந்தரரிடம் அன்பு காட்டுவதற்கு, தனிப்பட்ட ஒரு காரணமும் உண்டு. இடைக்காலத் தமிழர் தம் வாழ்க்கையில் மறந்துபோன குறிக்கோள், இறை உணர்வு, தொண்டு மனப்பான்மை என்ற மூன்றுக்கும் தம் வாழ்நாளையே செலவிட்ட அறுபத்து மூன்று தமிழ்மக்களின் வாழ்க்கை முறையைப், பின்னர் வந்த தமிழ் மக்கள் அறிந்துகொள்வதற்கு அவர்கள் வரலாற்றைச் சுருக்கிக் கூறிய திருத்தொண்டத்தொகை ஒரு மாபெரும் புதையலாகும். இந்தப் புதையலை வெளிக்கொணர்ந்த பெருமை சுந்தரர்க்கே உரியது ஆதலால், சுந்தரர்மாட்டு எல்லையற்ற பக்தி கொண்டதுடன் அவர் வராலற்றையே முதலில் துவங்குகிறார். தடுத்து ஆட்கொண்ட கதை திருமுனைப்பாடி நாட்டில், திருநாவலூர் என்ற ஊரில் புகழனார், இசைஞானியார் என்ற தம்பதியருக்கு மகவாய் அவதரித்தவர், சுந்தரர் என்று நம்மால் அழைக்கப்படும் நம்பி ஆரூரர் ஆவார். சிவவேதியர் மரபைச் சேர்ந்த இவர், சிறுதேர் உருட்டி விளையாடும் இளம் பருவத்திலேயே அந்நாட்டுச் சிற்றரசர் நரசிங்க முனையரையன் என்பவனால் எடுத்து வளர்க்கப்பெற்றார். ஆதிசைவ மரபில் பிறந்த ஒருவரை, வேளாளனாகிய நரசிங்க முனையரையன் எடுத்து, மகனாக வளர்த்தான் என்கிறது பெரியபுராணம். இதைக் கூறவந்த சேக்கிழார், -