பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் 107 இந்தக் கிழவனின் உடை முதலியவை, அந்தத் திருமணக் கூட்டத்தில் முற்றிலும் பொருத்தமில்லாமல் அமைந்திருந்தது என்றாலும், வயது முதிர்ந்தவர்களைப் பாராட்டும் பண்பு தமிழ்நாட்டிற்கு உண்டாதலால் அனைவரும் அவனை வரவேற்றனர். இத்தனை வரவேற்புகளுக்கிடையேயும், கிழவன் முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதிலாக, ஒரு சினம் குடி கொண்டது போன்று இருந்தது. இவர்கள் வரவேற்பைச் சட்டை செய்யாத கிழவன், நேரே மணமகனிடம் சென்றான். மணமகனைப் பார்த்து, - * * - - - - - - * * * * * "என்னிடையும் நின்னிடையும் நின்ற இசை வால்யான் முன்உடையது ஓர்பெரு வழக்கினை முடித்தே நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி' என்றான் (பெ. பு-18) கிழவன் இவ்வாறு கூறவும், நம்பி ஆரூரர், "உற்றது ஓர் வழக்கு என் இடை நீ உடையது உண்டேல், மற்று அது முடித்து அலது யான் வதுவை செய்யேன்” (பெபு-182) என்று கூறிவிட்டார். எந்த நேரத்தில் நம்பி ஆரூரர் இவ்வாறு கூறினாரோ தெரியவில்லை, கல்யாணப் பந்தலில் வழக்கு முடியவும் இல்லை; அந்தத் திருமணம் நடைபெறவுமில்லை.