பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சேக்கிழார் தந்த செல்வம் அதன்பிறகு, கிழவன் ஒலையைப் படித்ததும் நம்பி ஆரூரர் தனக்கு அடிமை என்று கூறியதும், அதுகேட்டுச் சினந்த நம்பி ஆரூரர், "ஆசுஇல் அந்தணர்கள் வேறுஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல், பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோய்?' என்றார் (பெ. பு-86) அதன்பிறகு, திருவெண்ணெய் நல்லூர் பஞ்சாயத்து நீதிமன்றத்தில் இவ்வழக்கைக் கொண்டு சென்றதும், அவர்கள் வழக்கை நன்கு விசாரித்து விட்டு, "நம்பி ஆரூரர்! தோற்றீர்” என்று முடிவு கூறியதும், பெரியபுராணத்தில் விரிவாகப் பேசப்படுகிறது. சேக்கிழாரின் சட்ட நுணுக்கம் இப்பகுதியில், நீதிமன்றத்தார் ஆட்சியில், ஆவணத்தில், அன்றி மற்றார் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்று, கிழவேதியனைக் கேட்கிறார்கள். ஓர் அந்தணன் மற்றோர் அந்தணனுக்கு அடிமை யாதல் மரபில்லை. அது இல்லாதபொழுது ஆவணம் என்று சொல்லப்படும், எழுதப்பட்ட சான்றுகள் பேசப்பெறுகின்றன. அதைக் காட்டியே பழைய மன்றாடியாகிய கிழவன், தன் வழக்கை வெல்கிறான். இப்பகுதி, சோழப் பேரரசின்