பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் 109 தலைமை அமைச்சருக்கு இருந்த சட்ட ஞானத்தை எடுத்துக் காட்டச் சிறந்த சான்றாகும். இது அல்லாமல், இவ்வழக்கில் மற்றோர் சிறப்பையும் எடுத்துக் காட்டுகிறார் தலைமை அமைச்சர். நீதித் துறையின் நேர்மை, முறைமை முன்பின் காணப்பெறாத இவ்வழக்கில் வாதியாக வந்த இக்கிழவன், அவ்வூராரால் முன்பின் அறியவோ, காணவோபடாதவன். பிரதிவாதியாகிய நம்பி ஆரூரர் உள்ளூர்க்காரர்; பல தலைமுறைகளாக நீதி மன்றத்தாருக்கு அறிமுகமான குடும்பத்தைச் சேர்ந்தவர். போதாதற்கு அந்நாட்டுச் சிற்றரசனால் மகன்மை கொள்ளப்பெற்றவர். இவை எல்லா வற்றையும்விட, வழக்கோ சமுதாய மரபிற்கு முற்றிலும் மாறுபட்டது. அப்படி இருந்தும், அந்த ஒலையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றத்தார் வழக்கு முடிகின்றவரை வாதியை யார் என்று கேட்டுக் கொள்ளவேயில்லை. அந்தக் கிழவன் அதே ஊர்க்காரன் என்று அந்த ஒலையில் எழுதியிருந்தும், நீதிமன்றத்தார் அவனை யார், எவன் என்று கேட்டு அறிய முற்படவில்லை. சட்டத்தின் எதிரே முன்பின் தெரியாத வாதியும், அரசரால் வளர்க்கப்பெற்ற உள்ளூர்க்காரரான பிரதிவாதியும் ஒன்றாகவே கருதப்பட்டனர். பிரதிவாதி வேண்டியவர் என்பதற் காகவோ வாதி இன்றோ நாளையோ முடியப்போகும் கிழவன் என்றோ பிரதிவாதி இளைஞன் என்றோ