பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சேக்கிழார் தந்த செல்வம் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. வாதிக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறிய பிறகுதான் நீதிபதிகள் என்ற முறையில் இல்லாமல், சாதாரண மனிதர்கள் என்ற முறையில் "பெரியவரே! தாங்கள் காட்டிய ஒலையில் தாங்கள் இந்த ஊர்க்காரர் என்று குறிக்கப் பெற்றிருந்ததே, இத்தனை ஆண்டுகளாக இவ்வூரில் வாழும் நாங்கள் ஒருமுறைகடத் தங்களைக் கண்டதில்லையே! தாங்கள் எங்கு உறைகின்றீர்கள்? தங்கள் வீடு, மனை வாழ்க்கை என்பதை அறிய ஆசைப்படுகிறோம்’ என்றார்கள். அக்காலத்து நீதிபதிகள் தமிழகத்தில் இவ்வளவு துய்மை உடையவர்களாகவும் நல ஒழுக்கம், நற்பண்பு, விருப்பு, வெறுப்பு என்பவை இல்லாத நடுநிலையாளர்களாகவும் இருந்தார்கள் என்று நினைக்கும்பொழுது, இன்று வாழும் நாம் ஒரு துயரப் பெருமூச்சு விடுவது தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. பழைய மன்றாடியாகிய கிழவன் தன் வீட்டைக் காட்டுவதாகக் கூறி, நம்பி ஆரூரர் உள்பட அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு திருவருள்துறை என்று பெயர் பெற்றிருந்த அவ்வூர்க் கோயிலினுள் சென்றான். வீட்டைக் காட்டுவதாகத் தங்களை அழைத்துவந்த கிழவன், கோயிலுனுள் சென்றதைக் கண்டு திகைத்துப்போனார்கள் என்பதைக் கூறவந்த கவிஞர் பெருமான், . -