பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் 11 திரு அருள் துறையே புக்கார், கண்டிலர் திகைத்து நின்றார்.' (பெ. பு-21) என்று கூறுகிறார். சொற்றமிழ் இதன்பிறகு, இறைக்காட்சியும் இறையருளும் பெற்ற நம்பி ஆரூரர், அப்பெருமானின் கட்டளைப் படி சொற்றமிழ் பாடத் தொடங்கினார். இதனைக் கூறவந்த சேக்கிழார், சொற்றமிழ் பாடுக என்றான் துமறை பாடும் வாயார். இத்தொடரில் உள்ள சொல்+தமிழ் என்ற சொற்களுக்கு, நிறைந்த சொற்களையுடைய தமிழ் என்றே பலரும் பொருள் கண்டுள்ளனர். இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ள 'சொல் என்பதற்கு ஒப்பற்ற ஒரு சொல்லையுடைய தமிழ்’ என்று பொருள் கூறி, அதற்குப் பின்வரும் விளக்கத்தையும் தந்துள்ளார் பேராசிரியர் கவிக்கோ. அப்துல் ரகுமான் அவர்கள். இறைவனைக் குறிக்க 'அவன்’ என்ற ஆண்பால் சொல்லையே எல்லா மொழிகளும் பயன்படுத்துகின்றன. சாக்தர்கள், இறைவனைத் தாய்வடிவாகக் கொண்டு அவள் என்ற சொல்லால் குறிக்கின்றனர். இவ்விருவர் கூற்றிலும் ஒரு சிறு குறை ஏற்படுகிறது. அவன்’ என்று கூறும்பொழுது இறைவனின் பெண்மை விடப்படுகிறது. அவள்” என்று கூறும்பொழுது