பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சேக்கிழார் தந்த செல்வம் ஆண்மை விடப்படுகிறது. இறைவனோ ஆணும் அல்லன்; பெண்ணும் அல்லன்; ஆணாகவும் உள்ளான்; பெண்ணாகவும் உள்ளான். அப்படியுள்ள ஒரு பொருளைக் குறிக்கப் பிற மொழிகள் கூறும் 'அவன்’ என்ற சொல்லோ, அவள்” என்ற சொல்லோ பயன்படாது. ஆண், பெண் இரண்டையும் சேர்த்து ஒன்றாகவே குறிக்க ஒரு சொல் வேண்டுமானால், அவர் என்ற சொல் தமிழ் மொழி ஒன்றில்தான் உள்ளது. எனவே, அவர் என்ற ஒப்பற்ற சொல்லை உடைய தமிழ்மொழியைக் குறிக்கத்தான், சொற்றமிழ்’ என்று தெய்வப்புலவர் சேக்கிழார் பாடினார் என்ற இந்த அழகிய விளக்கத்தைத் தந்த பேராசிரியர் கவிக்கோ அவர்கள் நம் பாராட்டுக்கு உரியவர்கள். இதனை குமரகுருபரர் 17ஆம் நூற்றாண்டிலேயே சிதம்பரச் செய்யுட் கோவை என்ற தம்முடைய நூலில் பின்வரும் பாடலில் கூறியுள்ளமை அறியத்தக்கது. அப்பாடல் வருமாறு. "அருவருக்கும் உலகவாழ்வு அடங்க நீத்தோர்க்கு ஆனந்தப் பெருவாழ்வாம் ஆடல் காட்ட மருஅருக்கன் மதிவளிவான் யமானன் தீநீர் மண்ணெனும்எண் வகையுறுப்பின் வடிவுகொண்ட ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருஒன்றால் அவ் உருவைஇஃது ஒருத்தன்என்கோ ஒத்தினன்கோ இருவருக்கும் உரித்தா ஒருவர் என்றுஓர் இயற்சொல் இலதெனின் யான்மற்றென் . . . . செய்கேனே' (சிதம்பரச் செய்யுட் கோவை-54)