பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சேக்கிழார் தந்த செல்வம் "உடைய அரசு உலகு ஏத்தும் உழவாரப் படை ஆளி விடையவர்க்குக் கைத் தொண்டு விரும்புபெரும் பதியை மிதித்து அடையும் அதற்கு அஞ்சுவன் என்று அந்நகரில் புகுதாதே மடைவளர் தண் புறம்பணையில் சித்தவட மடம் புகுந்தார்.” - w (பெ. பு-229) சிவவேதியராகப் பிறந்தவரும் அரசற்குரிய சிறப்புக்களோடு வாழ்ந்தவரும் இறைவனே மானுட வடிவில் வந்து அவனாலேயே ஆட்கொள்ளப் பெற்றவரும் அவனாலேயே "தோழமையாக உனக்கு நம்மைத் தந்தோம்’ என்று சிறப்புச் செய்யப் பெற்றவரும் நூற்றுக்கணக்கான அன்பர்கள் புடைசூழ வருபவரும் மணப்பருவத்தில் உள்ள கட்டிளங் காளையும் ஆவார் நம்பி ஆரூரர். இந்த நிலையில் இருநூறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒருவரைப்பற்றி நினைத்து, அவர் கைத்தொண்டு செய்த இடத்தில் நான் காலால் மிதித்து நடக்க மாட்டேன்’ என்ற முடிவுக்கு வந்துள்ளார் அவர் பதவி, செல்வம் ஆகிய இரண்டும் அப்பெருமானுடைய மனத்தில், பண்பாட்டில் எவ்விதத் தாக்கமும் விளைவிக்க வில்லை என்பதை அறிய முடிகிறது. இளைஞர் சமுதாயம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு பண்பாடாகும் இது. இன்றைய சமுதாயத்திற்குச்