பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் 115 சேக்கிழார் தந்த செல்வத்தின் முதல் பகுதியாகும் இது. இளைஞர்க்கு இன்னொரு செல்வம் இதனை அடுத்து, ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சித்தவட மடத்தில் உடன் வந்த அன்பர்கள் ஒவ்வோர் இடத்தில் படுத்துறங்க, நம்பி ஆரூரர் ஓர் இடத்தில் படுத்துறங்குகிறார். நடுச் சாமத்தில் யாரோ ஒருவருடைய பாதம் அவர் தலையில் படுகிறது. தன்தலையில் கால் படுமாறு நீட்டிய ஒருவரை, ஒரு சிறிதும் சினம் கொள்ளாமல், 'ஐயா! தாங்கள் என் தலையில் கால் படுமாறு படுத்துள்ளீர்கள்’ என்று அமைதியாகச் சொல்ல, அக்காலுக்குரியவர் "திசை அறியா வகை செய்தது என்னுடைய மூப்புக் காண்” (பெபு-232 என்று பதிலளித்தார். நம்பி ஆரூரர் வேறோர் இடத்தில் படுத்தார். அங்கும் இதே நிலை; இதே பதில், பலமுறை இடம் மாறிப் படுத்தும், காலை நீட்டிய கிழவன், மாற்றிக்கூட விடை தராமல் அதே விடையைத் தந்துகொண்டிருந்தான். நாடகம் பலமுறை நடந்தும் ஒரு சிறிதும் சினம் கொள்ளாத நம்பி ஆருரர், ஒர் உண்மை உணர்ந்தார். இக்காலுக்குரிய கிழவன் திசை அறியாமல் இதனைச் செய்யவில்லை. வேண்டுமென்றே செய்கின்றான் என்பதனை நன்குணர்ந்தார் நம்பி ஆரூரர். அப்பொழுதும், தம் பண்பாட்டில் ஒரு கடுகளவும் குறையாமல், - -