பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சேக்கிழார் தந்த செல்வம் 'இங்கு என்னைப் பலகாலும் மிதித்தனை நீ யார்?" (பெயு-233) என்று வினவ, "கங்கைசடைக் கரந்தபிரான் 'அறிந்திலையோ? " எனக் கரந்தான்.” (பெ. பு-233) என இறைவன் கூறி மறைந்தான். திடுக்கிட்டு எழுந்த நம்பி ஆரூரர் தம்முடைய எசமானனை அறியாத அடிமைகளும் இருக்கின்றார்களே என்ற கருத்தில், தம்மானை அறியாத சாதியார் உளரே (பெ.பு.-234) என்ற பதிகத்தைப் பாடி மனம் உருகுகின்றார். இளங்குமரன் ஒருவன், தன்னைச் சுற்றிப் பலர் புடைசூழ வருகிறான். இரவு நேரமாதலின், ஒரு பொது இடத்தில் தங்கி உறங்குகிறான். யாரோ முன்பின தெரியாத ஒரு கிழவன் பலமுறை அவ் இளைஞன் தலையில் காலால் மிதிக்கிறான். இந்த ஒரு சூழ்நிலையை நினைத்துப்பார்த்தால், இளைஞன் கோபம் கொண்டிருந்தாலோ, அக்கிழவனைப் புடைத் திருந்தாலோ அதில் தவறில்லை என்றே தோன்றும். பலமுறை மிதித்த பிறகும், "மிதித்த நீ யாரையா?” என்று வணங்கிய வாயினராக நம்பி ஆரூரர் கேட்கிறார். நுணங்கிய கேள்வினுக்கல்லால் இத்தகைய வணங்கிய வாய் அமைதல் அறிது. இந்நிகிழ்ச்சியும்