பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சேக்கிழார் தந்த செல்வம் சிவபெருமான், அம்மையே! என்று அழைத்ததால், காழிப்பிள்ளையாருக்குக் காரைக்கால் அம்மையார் பாட்டிமுறை ஆகிறார். எனவே, புகலிவேந்தர் என்ன செய்தார் என்று கூறவந்த சேக்கிழார், 'இம்மையிலே புவியுள்ளோர் யாரும் காண ஏழ் உலகும் போற்றிசைப்ப எம்மை ஆளும் அம்மை திருத் தலையாலே நடந்து போற்றும் அம்மையப்பர் திருவாலங்காடு ஆம் - (பெயு-291) என்று பாடுகிறார். எத்துணைப் பெரியவர்களாயினும் - இறைவன் அருளை முழுவதுமாகப் பெற்றவர்களாயினும் - இப் பெருமக்கள் தமக்கு முன்னர் வாழ்ந்த அடியவர்களை மதித்துப் போற்றி நடந்தார்கள். காழிப்பிள்ளையார், அம்மையாரை மதித்து நடந்தார்; நாவரசர், காழிப் பிள்ளையாரை மதித்து நடந்தார்; சுந்தரர், நாவரசரை மதித்து நடந்தார். இன்றைய சமுதாயம் ஓங்க வேண்டுமேயானால் நம் முன்னோராகிய இத் தமிழ்ப் பெருமக்களின் பண்பாட்டையும், வாழ்க்கை முறையையும் அறிந்துகொண்டு, முன்னோருக்கு மதிப்புத் தந்து வாழ்ந்தால்தான் நமக்குப் பின்னே வருபவர்கள் நம்மை மதித்துப் போற்றுவார்கள் என்ற இந்த அறிவுரை, சேக்கிழார் தந்த செல்வத்தின் மூன்றாவது பகுதியாகும். - -