பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 3 பொருட்செல்வம், மக்கட்செல்வம் முதலிய வற்றைக் கண்ணால் கண்டு கையால் தொட்டுப் பார்க்க முடியும். செவிச்செல்வம் அவ்வாறில்லை. மனநிறைவைத் தரக்கூடிய கவிதை, காப்பியம் முதலியவை செவி வழியாகச் சென்று அந் நிறைவைத் தருகின்றன. இவற்றைக் கேட்பதனால் மனத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, நிறைவு ஏற்படுகின்றது; ஆதலின் இவற்றைக் கேள்விச் செல்வம், செவிச்செல்வம் என்று குறிப்பிடுகின்றார், இச்செல்வம் மிக மிக நுண்மையானது. செவிகள் இருந்தும் இவற்றைக் கேட்கவில்லையானால் அச் செவிகளைக் "கேள்வியால் தோட்கப் படாத செவி' குறள்-48) என்கிறார் வள்ளுவர். இச் செவிச் செல்வத்தை விரும்பாமல் உணவை விரும்பிச் சாப்பிடுபவர்களை மாக்கள் (420) என்று ஏசுகிறார் வள்ளுவர். இந்தச் செவிக்குள் தேன் எனப் பாய்ந்து மன நிறைவைத் தருவதோடுமட்டு மல்லாமல் வாழ்க்கை முன்னேற்றம், ஆன்ம முன்னேற்றம் ஆகியவற்றைத் தரக்கூடிய திருத்தொண்டர் புராணத்தைச் செல்வம் என்று கூறுவதில் தவறு ஒன்றுமில்லை. இச் செல்வத்தைத் தந்தவர் சேக்கிழார் பெருமான் ஆவார். இத்தகைய அரிய செல்வத்தைத் தந்த சேக்கிழார் யார்? சென்னையை அடுத்த குன்றத்துரில் 12ஆம், நூற்றாண்டில் தோன்றியவர். இப் பெரியார்