பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் 121 விட்டன. அதே வினாடியில் ஆரூரரிடம் இதுவரை காணப்படாத பேரின்ப உணர்ச்சி பொங்கத் தொடங்கியது. கூத்தனின் திருநயனம், பொறிகள் முதலியவற்றை ஒரு நிலையில் நிறுத்திவிட்டவுடன், அந்தக் காந்த அலைகள் எங்கும் பரவுவது போல ஆரூரரின் உள்ளே பேரின்ப வெள்ளம் நிறைந்தது. இந்தக் காட்சியிலிருந்து நான்கு நூற்றாண்டு களைக் கடந்து, சோழப் பேரரசின் தலைமை அமைச்சர் தம்முடைய காலத்திற்கு வருகிறார்; கண்ணை விழித்துப் பார்க்கிறார். கூத்தனின் எதிரே தான் நிற்பதைக் காண்கிறார். திடீரென்று உள்ளே ஓர் எண்ணம் தோன்றுகிறது. நம்பி ஆரூரர் வழிபட்ட காட்சியைத் தம் மனக் கண்ணில் விரிவாகக் காணுமாறு கூத்தன் ஏன் அருள் செய்தான் என்ற வினாவை எழுப்பிய அதே கணத்தில் அதற்குரிய விடையும், அமைச்சரின் மனத்தில் கிடைத்துவிட்டது. மாபெரும் கவிஞராகிய அவர், புறத்தே நின்று, ஆரூரர் வழிபட்டதைக் கண்டு உணர்ந்தார் அல்லவா? அதை அப்படியே, அதாவது தாம் கண்ட காட்சியைப் LlíTL– வேண்டும் என்பதுதான் கூத்தனுடைய கட்டளை என்பதை உணர்கிறார். ஒரு வினாடியில் அவன் அருளாலேயே பாடல் வெளிப்படுகிறது. "ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பு அரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக,