பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சேக்கிழார் தந்த செல்வம் இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லைஇல் தனிப்பெரும் கூத்தின் வந்த பேர்இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறுஇலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்’ - - (பெ. பு- 252) இப் பாடலின் முதல் இரண்டு அடிகளில் ஆரூரர் வழிபட்ட முறையையும் அவருடைய பொறிகள், அந்தக் கரணங்கள், முக்குணங்கள் என்பவை ஒரே நேர்கோட்டில் நின்ற சிறப்பையும் கூறிவிடுகிறார் கவிஞர் பெருமான். நேர்கோட்டில் நின்றன என்றால், அக்கோடு எங்கே தொடங்கி, எங்கே முடிகிறது என்பதையும் அறிவிக்கின்றார். முக்குணங்களும் சாத்விகத்தில் தொடங்கி, அந்தக்கரணங்களின் வழிச் சென்று, கண்களின் மூலம் வெளி வந்து, கூத்தனின் நடனத்தில் அக்கோடு நின்றது. இப்பொழுது ஒர் எதிர்நிகழ்ச்சி ஏற்படுகின்றது. கூத்தனின் கருணை, இதே கோட்டின் வழியாக மீண்டுவந்து, ஆரூரரின் கண்கள் வழியாக உள்ளே புகுந்து, அந்தக்கரணங்களை நிறைத்து, சாத்விகக் குணத்தையும் நிறைத்துவிட்டது. இந்த அருள் நோக்கம், இவை அனைத்தையும் நிறைத்ததால் என்ன விளைவு ஏற்பட்டது என்பதைத் தெய்வப் புலவர் பாடலின் நான்காவது அடியில் எடுத்துக் கூறுகிறார். பேரின்ப வெள்ளத்துள் திளைத்தார்’ என்று கூறும்பொழுது அது எத்தகைய இன்பம் என்ற