பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சேக்கிழார் தந்த செல்வம் இம் மண்மேல் வாழ்ந்து, நூற்றுக்கணக்கான சொற்றமிழ் மாலைகள் பாடி, அடியார்களின் பட்டியலை அழகுத் தமிழில் தருவதற்காகத்தானே ஆரூரரை அனுப்பினான்? இப்பொழுது, பேரின்ப வெள்ளத்துள் திளைத்து அங்கேயே நின்றுவிட்டால், இச்செயல்கள் எவ்வாறு நடைபெறும் அதைக் குறிக்கத்ததான், மாறு இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்’ என்று பாடுகிறார் சேக்கிழார் பெருமான். ஒரு குறிப்பிட்ட பக்குவம் வரும்பொழுது, மலர் மலர்ந்து மணம் பரப்புவதைக் காணுகின்றோம். அதுவரை அம் மணம் மலருள்ளேயே மறைந்து கிடந்தது. அதுபோலக், கூத்தனின் பேரின்ப வெள்ளம், சுந்தரரின் அகமனத்தில் நிறைந்து கிடப்பதைக் கூத்தன் வெளியே கொணர்கின்றான். முதலில், அந்த வெள்ளத்துள் ஆரூரர் திளைத்தார்; பிறகு, கூத்தனின் ஆணைப்படி அந்த இன்பத்தைச் சொற்றமிழ் மூலம், பாடல்களாக்கி வெளியிட்டார். அங்ங்னம் வெளியிடுவதற்காகவே கூத்தன், அவரை இந்நிலவுலகில் நிறுத்தினான் என்பதை அறிவிக்கவே மலர்ந்தார்’ என்ற சொல் மூலம் கவிஞர்பிரான் வெளியிடுகின்றார். சேக்கிழார் பெருமான் காப்பியத்துள் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் என்னும் தாமரைத் தடாகத்துள், இந்த ஒரு பாடல் ஏனைய மலர்களை விடப் பல முழம் உயர்ந்து நிற்பதை அனுபவித்து அறியலாம்.