பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் 125 காலமும் சமயமும் கடந்த பாடல் இந்தப் பாடல், மனித சமுதாயத்தில் ஒரு சிலருக்கே பயன்படக் கூடிய பாடலாகும். பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரைசேர வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வாழ்பவர்கள், ஒவ்வொரு காலத்திலும் உளர். அந்தக் காலகட்டத்தில், வாழ்கின்ற கோடிக்கணக்கான மக்களில் இத்தகையவர் ஒரு சிலரே ஆவர். இவர்கள், நாடு, மொழி, இனம் என்ற அனைத்துப் பிரிவினை களையும் கடந்து நிற்பவர் ஆவர். பிறவிக் கடலை நீந்த வேண்டும் என்ற அவர்களுடைய குறிக்கோளை அடையச் சேக்கிழார் காட்டும் செந்நெறி ஆகும் இது. இந்து வாழ் சடையான் என்ற சொல், சிவபெருமானைக் குறிப்பதால், இப்பாடல் சைவர் களுக்குரியது என்று சிலர் நினைக்கலாம். இச் சொல்லுக்குப் பதிலாக 'எல்லையில் இறைவன் என்ற சொல்லைப் பெய்து விட்டால், இப்பாடல் எல்லாக் காலத்துக்கும், எல்லாச் சமயத்தாருக்கும் வழி காட்டுகின்ற ஓர் இணையற்ற பாடலாகிவிடும். இப் பிரபஞ்சம், அணுக்களின் சேர்க்கையால் ஆனது. அணுக்கள் என்று கூறியவுடன் அது ஒயாது இயங்கிக் கொண்டே இருக்கும் இயல்புடையது என்பதையும், இயங்கல் தொழில் நின்றால் அனுப் பிளந்து வேறாகிவிடும் என்றும் இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. எனவே, அணுக்கணுவாகி, அவற்றின் உள்ளும் புறமுமாகி எங்கும் நிறைந்