பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 சேக்கிழார் தந்த செல்வம் துள்ளாள் இறைவன் என்ற கருத்தை எல்லாச் சமயங்களும் ஏற்றுக்கொள்ளும் என்பதில் தடை யில்லை. எனவே, எல்லைஇல் இறைவன் ஆடும் தனிப்பெருங்கூத்து என்று சேக்கிழார் பெருமான் கூறிய மூன்றாவது அடிக்குப் பொருள் கொண்டால், எல்லாக் காலத்துக்கும், எல்லா மனிதர்க்கும், எச்சமயத்தாருக்கும் பொருந்திய பாடலாகும் இது என்பதை எளிதில் அறியலாம் உலகம் முழுவதற்கும் பயன்படக்கூடிய இந்த ஒரு LissL-60)%U இயற்றுவதற்காகவே, அமைச்சர் பெருமானுக்குக் கூத்தன், சுந்தரர் வழிபட்ட முறையைக் காணுமாறு செய்தான். அதன் பயனாக விளைந்ததே இப்பாடல். "உலகெலாம்" என்று இறைவன் அடியெடுத்துக் கொடுத்தமையின் சாதி, சமய, இன வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அறிந்து, உணர்ந்து, பின்பற்றுவதற்குரிய ஒரு வழிமுறையை இப்பாடல் மூலம் சேக்கிழார் அருளியுள்ளார். சற்றே மாறுபட்ட காதல் பெருங்காப்பியம் என்றால், தலைவன், தலைவி சந்திப்பு, காதல் கொள்ளுதல்,அக்காதல் முடிவதற்குள் துயரமடைதல் என்பவை இடம் பெற்றிருக்கும். தனித்தனி வரலாறுகளைக் கூறும் பெரிய புராணத்தில் அதற்கு அதிக இடம் இல்லை யென்றாலும், சுந்தரர், பரவையார் இருவர்