பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் 127 சந்திப்பையே இதற்குப் பயன்படுத்திக்கொள்ளுகிறார் காப்பியப்புலவர். ஒரு திருமணம் தடைப்பட்ட பிறகு, சுந்தரர் மனத்தில் இறையன்புதவிர வேறு எதுவும் இடங்கொள்ளாத நிலையில், அப்பெருமான் தலயாத்திரை செய்து கொண்டு திருவாரூரை அடைகிறார். பூங்கோயில் அமர்ந்த புராதனனை வழிபடச் செல்லும்பொழுது, எதிரே வழிபட்டுத் திரும்பிவரும் ஒரு பெண்மணியை காணுகிறார். இறைவனைத்தவிர வேறு எதனையும் சிந்தியாத அந்த இருவர் மனத்திலும் ஓர் இன்ப அதிர்ச்சி. ஒருவரை ஒருவர் இன்னார் என்று அறியாத நிலையில் அவர் யாராக இருக்கக்கூடும் என்று இருவர் மனத்திலும் எண்ணங்கள் தோன்றுகின்றன. இந்த எண்ணங் களுக்கு வடிவு கொடுப்பது சங்க காலத்திலிருந்து, 12ம் நூற்றாண்டுவரை பயின்றுவரும் பகுதிதான். அதற்குச் சற்று மாறுபட்டுச் சேக்கிழார் இதோ பாடுகிறார், எதிரே வந்த பெண்மணியைப்பற்றிச் சுந்தரர் என்ன நினைக்கிறார் என்பதைக், & , . "கற்பகத்தின் பூங்கொம்போ? காமன்தன் . . . . . . . . . . . பெருவாழ்வோ? பொற்புஉடைய புண்ணியத்தின் புண்ணியமோ? - ' , புயல சுமந்து வில்குவளை பவளமலர் மதிபூத்த . - விரைக்கொடியோ? அற்புதமோ? சிவன் அருளோ? அறியேன் r - என்று அதிசயித்தார். (பெ. பு-286)