பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சேக்கிழார் தந்த செல்வம் என்ற பாடல் மூலம் விளக்குகிறார். தம் மனங்கவர்ந்த சுந்தரர்பற்றிப், பரவையார் என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றி, - முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகு ஒளியால் தன்நேர்இல் மாரனோ? தார்மார்பின் விஞ்சையனோ? மின்நேர்செஞ் சடை அண்ணல் மெய் அருள்பெற்று உடையவனோ? என்னே! என் மனம் திரித்த இவன் யாரோ?" (பெ. பு-290) என்று நினைக்கிறார் பரவையார். முருகனோ? விஞ்சையனோ? மன்மதனோ? என்று நினைத்த பரவையார் தம் மனப்பக்குவத்தால் இவர்கள் அல்லர்’ என்று ஒதுக்கிவிட்டு, மின் நேர் செஞ்சடை அண்ணல் மெய் அருள் பெற்று உடையவனோ? என்று பேசுகிறார். சுந்தரரோ என்னில், பரவையாரை அற்புதமோ, சிவனருளோ என்று அதிசயிக்கின்றார். இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பெற்ற சுந்தரர், இறைவனின் மெய்யருள் பெற்றவர் என்பதை நாம் அறிவோம். இச் செய்தி அறியாவிடினும் பரவையார் மனத்தில், மெய்யருள் பெற்றுடையவர் என்ற எண்ணம் தோன்றிற்று என்றால், பரவையாரின் ஆன்மிக உயர்வு, சுந்தரருக்குச் சற்றும் தாழவில்லை