பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 சேக்கிழார் தந்த செல்வம் இரண்டாம், குலோத்துங்கன் என்று சொல்லப்படும் சோழப் பேரரசனின் அமைச்சராக இருந்து, பின் அப்பதவியைத் துறந்து, சிதம்பரத்தில் தங்கி, பெரிய புராணம் என்று வழங்கப்படும் திருத்தொண்டர் புராணத்தை இயற்றினார். இவருக்கு நான்கு நூற்றாண்டுகள் முன்னர்த் தமிழகத்தின் தென் பகுதியில் மற்றொரு பாண்டிய மன்னனுக்கு அமைச்சராக மற்றொரு பெரியார் இருந்தார். இரண்டு பெரு மக்களும் வெறும் இலக்கியம் என்றளவில் நில்லாதனவும், ஆன்ம முன்னேற்றத்திற்கு வழி காட்டுவனவும் ஆகிய ஒப்பற்ற இரு நூல்களைத் தந்துள்ளனர். பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்த திருவாதவூரர், அமைச்சர் பதவியைத் துறந்து இறைவழிபாட்டிலேயே முழுநேரத்தையும் செலவு செய்து இறைவனை நேரே கண்டு, அந்த இறையனுபவத்தை முழுவதுமாகப் பெற்று, தாம் பெற்ற அனுபவத்தை நாமும் பெறத் திருவாசகம் என்ற அரிய செல்வத்தை அருளினார். இதனால் இவருக்கு மணிவாசகர் என்ற பெயரும் நிலைத்தது. திருவாசகம், பெரிய புராணம் என்ற இரண்டு ஆன்மிக நூல்களையும் அருளிச்செய்த இருவரும் பேரரசுகளின் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது வியப்பைத் தருவதாகும். பெரும்பதவி வகித்தவர்கள், பெருஞ்செல்வத்தில் வாழ்ந்தவர்கள், ஆன்மிக வாழ்க்கையைப் பெறுவதோ ஆன்மிக நூல்கள் எழுதுவதோ இயலாத காரியம் என்று வரலாறு அறிவிக்கின்றது. இந்த வரலாற்று