பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் 129 என்பதை பாடல் அறிவுறுத்துகின்றது. முன்பின் தெரியாவிடினும் இப்பெண்மணி சிவனருள் நிரம்பப் பெற்றவர் என்று சுந்தரர் எளிதில் அறிந்து கொள்கிறார். அதாவது, இறையருளை முழுதுமாகப் பெறாதவர் தம் மனத்தில் புகமுடியாது என்ற உறுதிப்பாடு இவர்களிடம் இருந்தது என்பதை இவர்கள் கூற்றால் அறிந்துகொள்ள முடிகிறது. தூய்மையான காதல் கூட இறைவனோடு தொடர்பு உடையது என்பதைத் தமிழர் நன்கறிந்திருந்தனர். அதனால் தான் இறைவனைப்பற்றி பாடும்போது கூட, அகத்துறையில் பாடல்கள் இயற்றினர். & 3. . கலப்பு மணம் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் சுந்தரர் பற்றியும், அவர் பாடிய அடியார்கள்பற்றியும் அறிந்து கொள்ளப் பெருமுயற்சி செய்திருக்கிறார். அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் சென்று எத்தனை ஆதாரங்கள் கிடைக்குமோ அத்தனை ஆதாரங் களையும் திரட்டியிருக்கிறார். எனவே, பரவையாரைப் பற்றி அறிமுகம் செய்கின்ற பாடலில், பதியிலார் குலத்தில் தோன்றிப் பரவையார் என்றும் நாமம்’ (பெயு-278) பெற்று வாழ்ந்தார் என்று பாடுகிறார். முதன் முதலில், இவ்வரலாற்றை அறிமுகம் செய்யும் சேக்கிழார் சராசரித் o தமிழராக இருந்திருந்தால், சுந்தரர் மணம் செய்யப்போகும் ஒரு பெண், வேசியர் குலத்தில் பிறந்தார் என்று சொல்வது இழுக்கு என்று