பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 சேக்கிழார் தந்த செல்வம் நினைத்து, அவர் வேளாளர் என்றோ வேறு குடியினர் என்றோ பாடியிருப்பார்கள். எட்டாம், நூற்றாண்டில் சுந்தரர் செய்த புரட்சியைத் தமி ழினத்திற்கு அறிவிக்க விரும்பிய சேக்கிழார், மாதவி தோன்றிய இக்குலம், எக்காரணத்தாலும் ஒதுக்கப்பட வேண்டிய ஒன்று அன்று என்பதை நிலைநிறுத்து வதையே குறிக்கோளாகக் கொண்டார். காதற் பரத்தையாகக், கோவலன் ஒருவனுக்கே உரியவளாக வாழ்ந்தாள் மாதவி. 2ஆம் நூற்றாண்டில் தமிழச் சாதியின் நிலைமை, வேறு; ஆேம் நூற்றாண்டில் சாதிகளின் இறுக்க நிலை வேறு. ஆயினும், தமிழ்ப் பண்பாடு மிக உயர்ந்துவிட்ட நிலையில் சிவவேதியர் குலத்தில் தோன்றிய ஒருவர், இறைவன் திருவருளால் அதன் துணை கொண்டு, பரத்தையர் குலத்தில் தோன்றிய ஒரு பெண்ணை மணம் முடிக்கின்றார். திருவாரூரில் வாழ்ந்த அந்தணர்கள் அனைவரும் இந்தக் கலப்புத் திருமணத்தை ஏற்றுக்கொண்டு, மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு தாமே முன்னின்று இத்திருமணத்தை நடத்திவைக்கின்றனர். கலப்புத் திருமணம் என்பது 20ஆம் நூற்றாண்டுப் புரட்சியாளர்கள் தமிழகத்திற்குத் தந்த அருங்கொடை என்று பெரிதாகப் போற்றுபவர்கள், தங்களின் முன்னோர்களின் வரலாற்றை அறியாதவர்கள் ஆவர். தேவாரம் பாடிய சுந்தரர், இம் மண்ணில் 8ஆம், நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றி வாழ்ந்த வரலாற்று நாயகர் என்பதையும் இது கற்பனைக்