பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் 131 கதை அன்று என்பதையும் மறந்துவிட்டதால்தான் நாம் இன்று இந்த இழிநிலையில் உள்ளோம். தமிழகத்தைப் பொறுத்தவரை கலப்பு மணம் என்பது அருகி நடைபெற்றாலும், 6ஆம், நூற்றாண்டிற்கு முன்னர்த்தொட்டே இருந்துவந்தது என்பதற்கு திருஞானசம்பந்தர் வரலாறு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ரிக்வேதத்தைப் பின்பற்றும் வேதியர் மரபில் தோன்றியவர் காழிப்பிள்ளையார் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், மயிலாப்பூரில் வாழ்ந்த சிவநேசச் செட்டியார் என்ற வணிகர், பூம்பாவை என்ற தம் பெண்ணை ஞானசம்பந்தருக்கு மணமுடிக்க வேண்டும் என்ற கருத்தில் வளர்த்தார் என்பதும் அப்பெண் பாம்பு கடித்து இறந்துவிட, அவள் எலும்பையும் சாம்பலையும் குடத்துள் அடைத்துக், காழிப் பெருமான் மயிலைக்கு வந்தபொழுது இவ் வரலாற்றைக்கூறி அவரிடம் அக் குடத்தை ஒப்படைத்தார் என்பதும் 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற செயலாகும். அதன் பிறகு, காபாலியின் தலைமகனாக நின்ற தமிழ்ஞானசம்பந்தர் அவ்வெலும்பைப் பெண்ணுக்கினார். சிவநேசர் 'மணம்புரிந்து கொள்க' என்று கூறியவுடன், காழிவேந்தர் கூறிய விடை தமிழ்ச் சமுதாயத்திற்கு என்றும் தேவையான பாடமாகும். "சிவநேசரே! எனக்குரியவள் என்று தாங்கள் வளர்த்த பூம்பாவை