பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சேக்கிழார் தந்த செல்வம் என்றோ இறைவனடி சேர்ந்துவிட்டாள். இனி அந்த எலும்பினின்று நான் உருவாக்கிய இவள், என்மகள் என்பதை மறந்துவிட வேண்டா என்று கூறி சிவநேசச் செட்டியாரை அமைதிப்படுத்தினார். இதேபோன்று, சுந்தரமூர்த்திகளுக்கு மணமுடிப்ப தற்காகக் கோட்புலியார் என்ற அடியார், வனப்ப்கை, சிங்கடி என்ற தம் இரு பெண்களையும் வளர்த்து வந்தார். சுந்தரர் வந்தபொழுது இவர்களை ஏற்றுக் கொள்ளுமாறு - வேண்ட, அவர்கள் இருவரையும் மடியிலிருந்தி இனி இவர்கள் தந்தை நான்’ என்று கூறியதுடன், தாம் பாடிய தேவாரத்திலும் வனப்பகை அப்பனாகிய நாவலூரன், சிங்கடியின் தன்தையாகிய நாவலூரன் என்று பாடியுள்ளார் என்றால், தமிழ்ப் பண்பாட்டின் இந்த உச்ச கட்டத்தை, இன்றைய தமிழர்களாகிய நாம் அறிந்துகொள்வது மிகத் தேவையாகும். பாடிப் பொருள் பெற்றார்.ஆனால் யாரை. சுந்தரர் வாழ்க்கையில், இன்றைய சமூகத்தினர் ஆகிய நாம் அறிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் பலவுண்டு. அவை அனைத்தையும் காண்பது இச்சிறுநூலின் எல்லைக்குள் அடங்காதாதலின், ஒன்று இரண்டு கருத்துக்களைமட்டும் சுட்டி மேல்ே செல்லலாம். இறைவனையே முழுவதுமாக நம்பி வாழ்ந்த இவர் போன்றோர், தம் தேவைக்காக