பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் 133 யாரிமும் சென்று எதையும் வேண்டும் பழக்கம் உடையவரல்லர் என்றாலும், மிகச் சிறந்த முறையில் திருவாரூரில் பரவையாரோடு இல்லறம் நடத்திய இவருக்கு, ஏனைய அடியார்களைப் போலல்லாமல், மிகுதியான பொருள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, பலமுறை இறைவனிடம் பொருள் கேட்டு, அதனைப் பெற்று இல்லறம் நடத்தினார் என்பதை அவருடைய பாடல்களே அறிவிக்கின்றன. ஆதலின், அந்த அகச் சான்றை வைத்துக் கொண்டு சேக்கிழார் பெருமான் அவர் பொருள் பெற்றதைப் பாடிச் செல்கிறார். அதில் ஒரு பகுதி, திருப்புகலூரில் நடந்த நிகழ்ச்சி யாகும். வழக்கம்போல் புகலூர்ப் பெருமானிடம் பொருள் கேட்க, அது உடனே கிடைக்கவில்லை. காரணம் அறியாத நம்பியாரூரர், திருக்கோயிலின் வெளியே வருகிறார். என்ன காரணத்தாலோ உறக்கம் அவர் கண்ணைச் சுழற்றிற்று. கோயில் திருப்பணிக்காக, சுட்ட செங்கற்கள் அடுக்கி வைக்கப்பெற்றிருந்தன. அதில் நான்கு செங்கற்களைத் தலைக்கு வைத்துக் கொண்டு தம்முடைய மேல் துண்டையே படுக்கையாக விரித்து அதன்மேல் படுத்துறங்கி விட்டார். உறக்கம் கலைந்து எழுந்தார். செங்கற்களை மூடியிருந்த மேல் துண்டை உதறி எடுத்தவுடன் அடியில் இருந்த செங்கற்கள் அனைத்தும், பொன்கற்களாக மாறியிருக்கக் கண்டார். மனம் கசிந்த நாவலூர் பெருமான், தம்மையே புகழ்ந்து