பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 : சேக்கிழார் தந்த செல்வம் இச்சை பேசினும்' என்ற பதிகத்தைப் பாடி அருளினார். அப்பாடல் இன்றும், என்றும் மனித குலத்திற்குத் தேவைப்படுகின்ற ஒன்றாகும். "ஒருவரைப் புகழ்ந்து எவ்வளவு இச்சகம் பேசினாலும் ஒன்றும் தராத மனிதர்களைப் புகழ்ந்து பாடாமல் இறைவனை ஏற்றிப் புகழ்ந்து பாடினால் இம்மையே தரும் சோறும் கூறையும் என்று பாடி, இந்த உலகத்தில் இவை கிடைப்பதோடல்லாமல், மறுமை இன்பமும் கிடைக்கும் என்று பாடினார். தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆரூரரின் இந்தப் பாடல் பதிகம் ஒரு மாபெரும் புரட்சியாகும். இன்று நமக்குக் கிடைத்துள்ள சங்கப் பாடல் தொடங்கி, சுந்தரர் காலம்வரையுள்ள எல்லா இலக்கியங்களும் மனிதர்களைப் புகழ்ந்து பாடுவதைக் குறை கூறவும் இல்லை; மறுக்கவுமில்லை. 2500 ஆண்டுகட்கு முன்னர்த் தோன்றிய தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கணம் வேறு மொழிகளில் காணப்படாத பொருளதிகாரம் என்ற பகுதியைப் பெற்றுச் சிறப்பு அடைந்துள்ளது. இரவலன் ஒருவன், வள்ளல் ஒருவனிடம் சென்று பரிசுபெற்றுத் திரும்பும் பொழுது, அவ்வள்ளலைச் சென்று காணாத மற்ற இரவலர்களை அவனிடம் செல்லுங்கள் என்று கூறுவது ஆற்றுப் படை' என்று தொல்காப்பியம் குறிக்கிறது. "பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறிஇச், சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்'