பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் 135 (தொல்,1084 என்று ஆற்றுப்படை இலக்கணத்தைப் பேசுகிறது தொல்காப்பியம். பத்துப்பாட்டில் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை என்பவை இடம் பெற்றுள்ளன. என்ன காரணத்தாலோ முருகனைப்பற்றிப் பாடும் பாடலுக்கும் திருமுருகாற்றுப்படை என்ற பெயர் தரப்பெற்றுள்ளது. ஆற்றுப்படை இலக்கணத்திற்கு மாறுபட்டிருப்பது இப்பாடல். சிறுபாணாற்றுப்படை என்றால், சீறியாழ் வாசிக்கும் பாணனை ஆற்றுப் படுத்துவது என்பது பொருளாகும். அந்த முறையில் முருகனை ஆற்றுப்படுத்துவது என்று பொருள் கொண்டால் பெருந்தவறு ஏற்பட்டுவிடும். எனவே, முருகனிடத்து ஆற்றுப்படுத்துவது என்று பொருள் கூறினார்கள் உரையாசிரியர்கள். இதுதவிர ஏனைய ஆற்றுப்படைகள் அனைத்தும் மனிதர்களைப் புகழ்ந்து பாடியவைதான். புறநானூற்றில் உள்ள பெரும்பாலான பாடல்கள் மனிதர்களைப் புகழ்ந்து பாடியவையே ஆகும். தமிழ்நாட்டில் நிலைபெற்று விட்ட இக் கருத்துக்கு மாபெரும் புரட்சியாளராகிய நம்பி ஆரூரர், முரண்பட்டு அதனை ஒதுக்கவேண்டும் என்று கூறுகிறார். கலப்புமணம் செய்துகொண்டு ஒரு புரட்சியைச் செய்த நாவலூரர், திருப்புகலூரில் இரண்டாவது புரட்சியைச் செய்கிறார். கேவலம், குறைபாடுடைய மனிதர்களை நிறைவுடையவர் களாகப் புகழ்வது இத்தமிழ்ச் சமுதாயத்தில் இன்றும் இருந்து வரும் பெரும் சாபக் கேடாகும். தப்பித் தவறி