பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 சேக்கிழார் தந்த செல்வம் ஒருவர் அதிகாரத்திற்கு வந்துவிட்டால் மனச்சான்றை விட்டுவிட்டு, அதிகாரத்தில் உள்ளவர்களைப் புகழும் பழக்கம் பெரும்பாலான தமிழர்களுக்குக் கைவந்த கலையாகும். இதனால் இரண்டு தீமைகள் ஏற்படுகின்றன. முதலாவது, இவ்வாறு புகழ்பவன், தான், தன்மதிப்பு, தன்மானம் என்பவற்றை இழந்து விடுகிறான். இரண்டாவதாக, பலராலும் புகழப் பெறும் ஒருவன்தான் உண்மையிலேயே இப் புகழுக்குரியவன் என்று நம்பத் தொடங்குகிறான். இருவரையும் அழிக்கும் இத் தீய பழக்கம் என்றோ தமிழ்நாட்டில் என்ன காரணத்தாலோ நிலைபெற்று விட்டது. கரிகால் பெருவளத்தானைப் புகழவந்த கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர், "மலை அகழ்க்குவனே, கடல் துார்க்குவனே; வான் வீழ்க்குவனே, வளிமாற்றுவன்' என, தான் முன்னிய துறை போகலின்’ (பட்டினப்பாலை:271-273) என்று பாடியது நகைப்பிற்குரியதாகும். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்த நகைப்பிற்குரிய இந்த நிலை, தமிழர்களாகிய நம்மிடம் இன்றும் இருக்கிறது என்று நினைக்கும்பொழுது வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. : × நம்பி ஆரூரர் வாழ்க்கையில் நிகழ்த்திய, நிகழ்ந்த பல வியத்தகு புரட்சிகரமான செயல்களை இதுவரை கண்டோம். இத் தமிழ்ச் சாதனைவாயிலாகத் தமிழினம் சிறப்பாகவும் மனித சமுதாயம்