பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 சேக்கிழார் தந்த செல்வம் எவ்வளவு கதறி அழுதும் கண்பார்வை திரும்பவில்லை. அடுத்து, காஞ்சியில் சென்று, தழுவக் குழைந்த பெருமானை மீட்டும் வேண்டுகிறார். தன் தோழனின் வேண்டுகோளுக்குத் தம்பிரான் செவிசாய்க்கவில்லை. ஆனால், தாய் கருணையே வடிவானவள் ஆதலின் ஒரு கண்ணைக் கொடுத்தாள் என்று பாடவரும் சேக்கிழார், 'மங்கைதழுவக் குழைந்தார் மறைந்த இடக்கண் கொடுத்தார்' (பெ.பு-8446) என்று பாடுகிறார். பெற்ற ஒரு கண்ணுடன், திருவாரூர் சென்று தம் பிழை பொறுக்குமாறு பன்முறை வேண்டி மற்றொரு கண்ணையும் ஆரூரில் பெற்றார் என்று பாடுகிறார் சேக்கிழார். இந்த நிகழ்ச்சியால் நாம் அறிய வேண்டிய பாடம் ஒன்றுண்டு. 'பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும் நம் போன்றவர்கள் இதன் உட்பொருளை அறிதல் கடினம். சுந்தரரைப் பொறுத்தமட்டில் சபதத் தையும் அதன் உட்பொருளையும் அறியாதவர் அல்லர். இருந்தாலும் அவர்க்குத் தாய்வீடு போன்ற திருவாரூர்ப் பூங்கோயில் நினைவுக்கு வந்தவுடன் சபதம், சங்கிலி எல்லாம் மறந்தன. தாம் செய்வது பிழை என்றாலும், இப்பிழையை இறைவன் மன்னித்து விடுவான் என்று அவர் நினைத்துவிட்டார். சபதத்தை மீறுவதற்குக் காரணம், ஆரூர்ப் பெருமானின் நினைவு