பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 5 உண்மைக்கு மாறுபட்டுப் புறநடையாக வாழ்ந்த இந்த இருவரும் அமைச்சர்களும் ஆவர். பக்தி இயக்க வளர்ச்சி 5 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி தொடங்கி 9ஆம் நூற்றாண்டின் தொடக்கம்வரை தமிழகத்தின் பெரும் பகுதி பல்லவர்கள் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. இப்பல்லவர்கள் தமிழ்நாட்டை ஆண்டாலும், தமிழர் அல்லாதவர்கள். தமிழகத்தில் பரவியிருந்த பக்திமார்க்கத்திற்கு அப்பாற்பட்டு; வேதத்தை அடிப் படையாகக் கொண்ட வைதிக மார்க்கத்தினரே பெரும்பான்மையான பல்லவர்கள் ஆவர். பிற்காலப் பல்லவர்கள் அவர்களுடைய மூதாதையர்கள்போல் அல்லாமல் தமிழிடத்து ஈடுபாடும் அதன் வளர்ச்சியில் மகிழ்ச்சியும் கொண்டவர்கள். இதற்குக் காரணம் 78ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய நாயன் மார்களும், ஆழ்வார்களும் பாடிய தேவாரங்கள், பிரபந்தங்கள் என்பவைகளே ஆகும். பல்லவ சாம்ராச்சியம் சரியப்போகும் காலத்திலே வாழ்ந்த தெள்ளாறு எறிந்த நந்திவர்மனும், வைரமேகனும் பெரிதும் தமிழ்ப்பற்றுக் கொண்டிருந்தனர். நந்தி வர்மன் காலத்தில் நந்திக்கலம்பகம் என்ற சிறந்த இலக்கியம் தோன்றியது உண்மைதான். பல்லவர்கள் வேதங்களையும் யாகங்களையும் பெரிதும் போற்றியவர்கள். ஆனால், தமிழ் நாட்டைப்