பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் 199 தானே! எனவே, இப் பிழையை இறைவன் மன்னிப்பான் என்று கருதிவிட்டார். அதுதான் அவருடைய எண்ணம் என்பதை அவருடைய பாடலே அறிவிக்கின்றது. - - "பிழையுளன பொறுத்திடுவர் என்று அடியேன். - - . பிழைத்தக்கால் பழியதனைப்பாராதே படலம் என்கண் மறைப்பித்தாய்” (திருமுறை-7-89-) என்பது திருவெண்பாக்கப் பதிகமாகும். சங்கிலிக்குச் செய்த சபதத்தால்தான் இது நிகழ்ந்தது என்பதையும், 'சங்கிலிக்கா என் கண்கொண்ட பண்ப!’ என்பதால் அறியலாம். தன் தோழன் இறைவன் ஆதலால், அவன் எதனையும் பொருட்படுத்த மாட்டான் என்ற எண்ணத்தில் செய்த காரியம் ஆகும் இது. என்றாலும், தோழனே. ஆயினும், தவறு செய்தால் இறைவன் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பது இந்நாட்டவர் கண்கூடாகக் கண்ட உண்மையாகும். இப்பெருமானை அடுத்து, அரை நூற்றாண்டுகள் கழித்து வந்த மணிவாசகருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. குதிரை வாங்குவதற்கு என்று ஒதுக்கப்பட்ட பணத்தை-அரசாங்கப் பொதுப் பணத்தைத் திருக்கோயில் கட்டச் செலவழித்தாலும் அது தவறுதான், அதற்குத் தண்டனையாகத் திருவாசகம் பாடிய பெருமான்கட பதினான்கு