இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
140 🞸 சேக்கிழார் தந்த செல்வம்
நாட்கள் கடும் தண்டனையை அனுபவிக்க நேரிட்டது என்பதை, இன்று வாழும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். பிறரை ஏமாற்றி, தவறான வழிகளில் பணத்தைச் சம்பாதித்து, வருடத்திற்கொரு முறை முருகப் பெருமானுக்குப் பாலபிஷேகம் செய்து விட்டுத் தங்கள் பிழைகள் மன்னிக்கப்பட்டு விட்டன என்று மனப்பால் குடிக்கும் போலி பக்தர்கள் மனத்தில் ஆழமாகப் பதித்துக் கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளாகும் மேலே சொல்லப்பட்ட இரு நிகழ்ச்சிகளும். இன்றைய சமுதாயத்தாருக்குச் சேக்கிழார் தந்த செல்வத்தின் நான்காம் பகுதியாகும் இது.
※※※※※