பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 சேக்கிழார் தந்த செல்வம் திலகவதியார் பிறந்து சிலமுறை யாண்டு அகன்றதன்பின் அலகு இல் கலைத்துறை தழைப்ப அருந்தவத்தோர் நெறி வாழ, உலகில் வரும் இருள் நீக்கி - ஒளிவிளங்கு கதிர்போல மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார். - - (பெ. பு-288) இப்பாடலை மேலோட்டமாகப் படிப்பவர்கள் திலகவதியார் பிறந்து சிலகாலம் கழித்து, உலகோரின் மன இருளைப் போக்கும் கதிரவன்போல மருள் நீக்கியார் என்ற பெயருடன் ஓர் ஆண் மகவு பிறந்தது என்ற பொருளை விளங்கிக்கொள்ள முடியும். அதில் தவறு ஒன்றுமில்லை, என்றாலும், சேக்கிழார் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியவை. என்பதை மனத்துட் கொள்வது நலம். - இருபதாம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் வாழும் நமக்கு அரசினர் விடாது அறிவுறுத்துகின்ற ஒரு செய்தி, ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடையே உள்ள காலம் மூன்றாண்டுகளுக்கு மேல் இருத்தல் நலம் என்பதாகும். இவ்வாறு கொல்லுவதற்குரிய காரணம் மக்கள் தொகையைக் குறைக்கவேண்டுமென்பதே ஆகும். ஆனால், நாவரசர் பிறந்த 6ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் மக்கள்