பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும். 143 தொகைப் பெருக்கம் எதுவுமில்லை. அப்படியிருக்க முதற் குழந்தை பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் என்று சேக்கிழார் கூறக் காரணம் என்ன? சில ஆண்டுகள் என்று கூறினாலே போதுமானதாயிற்றே அப்படி இருக்க முறையாண்டு’ என்று கவிஞர் கூறக் காரணம் யாது? தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றும் மகளிரிடை ஒரு பழக்கம் இருந்துவருகிறது. தை மாதத்தில் பிறந்த குழந்தையை அடுத்த சித்திரையில் குறிக்கும்பொழுது போன வருடம் பிறந்த குழந்தை என்று பேசும் மரபு இன்றும் உண்டு. இத்தகைய தவறு நேராமல் இருக்கவே, முறை ஆண்டு என்றார் சேக்கிழார். அதாவது பன்னிரு மாதங்கள் முறையாக முடிந்த ஒவ்வோர் ஆண்டாகக் கணக்கிட்டு, அத்தகைய ஆண்டுகள் சில கழிந்தபின் என்று கூறுவது திலகவதியாருக்கும் அவர் தம்பியாகிய மருள் நீக்கியாருக்கும் இடைவெளி ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்பதைக் குறிப்பதே ஆகும். செல்வர்கள் வீட்டில் எப்படியாவது, ஆண் பிள்ளை ஒன்று வேண்டும் என்று நினைப்பது பண்டுதொட்டுத் தமிழர்கள் வாழ்க்கையில் இடம் பெற்ற ஒன்றாகும். புகழனார் செல்வராயினும் முதலில் பிறந்தது பெண் குழந்தையே ஆயினும் எப்படியாவது ஒரு ஆண் குழந்தை வேண்டும், அதுவும் உடனே வேண்டும் என்று நினைக்கவில்லை என்பதை இன்றைய சமுதாயத்தார்க்கு வலியுறுத்தவே திலகவதியர் பிறந்து சிலமுறையாண்டு அகன்றதன் பின் என்று பாடுகிறார். - -