பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 சேக்கிழார் தந்த செல்வம் ... திருத்தொண்டர் புராணம் அடியார் வரலாறு களைக் கூறும் நூல் என்பதில் ஐயமில்லை. பக்திச் சுவை சொட்டும் படியாக அமைந்துள்ளது என்பதிலும் ஐயமில்லை. மறுமையில் வீடு எய்த வேண்டும் என்று நினைப்பவர்கள் பயில வேண்டிய நூல் என்பதிலும் ஐயமில்லை. இவை எல்லாவற்றையும்விடப் பெரியபுராணம் பொதுவாக மானிட சாதிக்கும் சிறப்பாகத் தமிழினத்திற்கும் வாழ வேண்டிய முறையைக் கற்பிக்கின்ற சமுதாய நூல் என்பதை மறத்தலாகாது. திலகவதியாருக்குப் பிறகு ஒர் ஆண் மகவு பிறந்தது என்று கவிஞர் கூறிப் போயிருக்கலாம். அவ்வாறு கூறாமல் சிலமுறை ஆண்டு அகன்றதன்பின் என்று ஏன் கூறினார் என்று ஆய்ந்தால், சமுதாயத்திற்கு ஒரு படிப்பினையை இலைமறை காயாகக் கற்பிற்கும் நோக்கத்துடனேயே இதனைக் கூறினார் என்பதை அறிய முடிகிறது. முடிவாகி, நிறைவேறாத திருமணம் திலகவதியார் மணப்பருவம் எய்தினார். கலிப் பகையார் என்ற ஓர் இளைஞருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பிய பெரியோர் சிலர் திலகவதியாரின் அழகு முதலியவற்றைக் கேள்விப் பட்டு அவர் தந்தையாராகிய புகழனாரிடம் வந்து அவர் பெண்ணைக் கலிப்பகையாருக்குத் தரவேண்டு மெனப் பேசினார்களாம். அதைக் கூறவந்த சேக்கிழார், மணம் பேசவந்தவர்களும் பெண்ணின்