பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 145 தந்தையும் என்ன பேசினார்கள் என்பதையும் கூறுகிறார். இரண்டு விஷயங்களைப் பேசி இரு. சாராரும் மனநிறைவு கொண்டனர் என்கிறார் சேக்கிழார், "குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார் பைந்தொடியை மணம் நேர்ந்தார். -

  • : 、 (பெயு-1294) என்பதால், பெண்ணின் தந்தை முதலில் அறிய விரும்பியது மணமகனின் குணநலன்களாகும். அதனாலேயே முதலில் குணம் பேசி என்கிறார் கவிஞர். அடுத்தபடியாக உள்ள குலம் பேசி என்பதனைக் கண்டு யாரும் மருள வேண்டியதில்லை. இன்று வழங்கப்படும் சாதி, குலம், கோத்திரம் என்ற பொருளில் சேக்கிழார் இதனைப் பயன் படுத்தவில்லை. குலம் என்ற சொல், குடிப்பிறப்பைப் குறிக்கும். அதாவது, பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள் என்ற மூன்று தலைமுறையை அறிவதன்மூலம் ஒருவருடைய குணநலம் நிலையானதா என்பதை அறிய முடியும். குலம் என்ற சொல்லுக்கு இதுவே பொருள் என்பத்ை.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப்படும். * (குறள்-958).