பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 சேக்கிழார் தந்த செல்வம் என்ற குறளால் அறியலாம். சிறந்த பெற்றோர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்த ஒருவன் தகாதவற்றைச் செய்ய மாட்டான். அவ்வாறு செய்வானே ஆயின் அவன் அப்பெற்றோர்களின் மகன் அல்லன் என்கிறார் வள்ளுவப் பேராசான். குலம் என்ற சொல்லுக்குக், குடிப்பிறப்பு என்ற பொருளே சிறப்பாக வழங்கிற்று என்பதை அறியலாம். அந்தப் பொருளிலேயே சேக்கிழார் இச்சொல்லைப் பயன்படுத்துகிறார் என்பதை அறிய முடிகிறது. இரு சாராரும் மன மகிழ்ச்சியோடு திலகவதி அம்மையாருக்கும் கலிப்பகையாருக்கும் மணமுடிக்க உறுதி பூண்டனர். மண உறுதி நிகழ்ச்சியின்பின் மணநாள் வருவதற்குமுன்னரே தந்தை புகழனார் இறையடி சேர்ந்தார். அத்துயரம் பொறாத அவர் மனைவியும் உயிர்நீத்தார். பெருந்துயரில் ஆழ்ந்திருந்த திலகவதியாரும் தம்பி மருள்நீக்கியாரும் சுற்றத்தார் அருகிருந்து தேற்ற, தாய் தந்தையருக்குரிய கடன்களை இயற்றிவிட்டு, ஒருவாறு மன அமைதி அடையும் நேரத்தில் மற்றோர் நெடுந்துயரம் செய்தியாக வந்து நின்றது. மணமகனாக நிச்சயிக்கப்பெற்றிருந்த கலிப் புகையார், போர்த் தொழில் பூண்டவர். மணஉறுதி நிகழ்ச்சி முடிந்த உடனேயே போர்க் களம் செல்ல நேரிட்டது. இறையருள் வேறாக இருந்தமையின் போரிடைச் சென்ற கலிப்பகையார் வீடுபேற்றை அடைந்தார்.