பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 147 தயா-அருள் ሯ : ..፥ « பெற்றோரை இழந்த பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் தமக்கை, தம்பி இருவருக்கும் கலிப்பகையார் விண்ணுற்ற செய்தி பேரிடியாய் வந்துற்றது. இந் நிலையில் திருமண உறுதி நிகழ்ச்சி நடைபெற்று விட்டபின் கலிப்பகையாரே தம் கணவர் என்ற முடிவுக்கு வந்த திலகவதியார் வேறு மணம் என்ற நினைவை ஒழித்து; இவ்வுடலைத் துறக்கத் துணிந்தார். ஏறத்தாழப் பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயது நிரம்பிய அவர் தம்பியாராகிய மருள்நீக்கியார் தாய் தந்தையரை இழந்தபிறகு தமக்கையே முழு ஆதரவு என்ற கருத்தில் தமக்கையார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, நீங்களும் இறக்கத் துணிந்தால் என் கதி என்ன ஆகும்? என்று அழுகிறார். அதனால் மனம் இளகிய திலகவதியார் என்ன செய்தார் என்பதைச் சேக்கிழார் இதோ கூறுகிறார்: - தம்பியார் உள் ஆக வேண்டும் என வைத்ததயா உம்பர்.உலகு அணைய உறு > . நில்ை விலக்க, உயிர் தாங்கி அம்பொன் மணி நூல் தாங்காது, - அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி, இம்பர்மனைத் தவம் புரிந்து, + திலகவதியார் இருந்தார் ... . . . . . . . . . . . . (பெ. பு-304)