பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சேக்கிழார் தந்த செல்வம் இப்பாடலில் பல நுண்மையான கருத்துக்களைத் தெய்வப்புலவர் சேக்கிழார் பெய்துவைக்கின்றார். வேறு துணையில்லாத தம்பிக்காகவாவது உயிர் வாழ வேண்டுமென்ற நினைவில் திலகவதியார் மங்கல நாண் அணியாமல் மனைத்தவம் புரிந்தார் என்று கூறுகிறது பாடல். தாய், தந்தையர், தமக்கை, தமையன், தம்பி என்பவர்களிடையே காணப்படும் பாசத்தை அன்பு என்ற சொல்லாலேயே இத் தமிழர் குறித்தனர். விவரம் அதிகம் தெரியாத மருள்நீக்கியார்மாட்டு தமக்கையாகிய திலகவதியார் கொண்டிருந்தது சகோதரபாசம் அல்லது உடன் பிறப்பு அன்பு என்பதே ஆகும். இதை அறியாதவ ரல்லர் சேக்கிழார். அப்படி இருந்தும் தம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயா என்று கூறுவதன் உட்கருத்து யாது? தயா என்ற வடசொல் கருணை என்கிற பொருளைத் தருமேதவிர அன்பு என்ற சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியாத சொல்லாகும். நாம் இறைவன்மாட்டுக் கொள்வது அன்பு; இறைவன் நம்மாட்டுக் கொள்வது கருணை அல்லது அருள் எனப்படும். இதை நன்கறிந்திருந்தும் 'தம்பி வாழ வேண்டும் என்ற அன்பினால் என்று சொல்லாமல், தயாவால் (அருளால்) தான் இறக்காமல் உயிர் வாழ முடிவு செய்தார் என்கிறது பாடல். இவ்வாறு கூறுவதால் இரண்டு அருங்கருத்துக் களைப் பெறவைக்கிறார் சேக்கிழார். முதலாவது, தம்பியின் நிலை கண்டு வருந்தி அவருக்கு அருள் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது; ஒரு