பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சேக்கிழார் தந்த செல்வம் பொறுத்தவரை ஒரு புதுமையான மறுமலர்ச்சி 6ஆம், நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றிற்று. 6ஆம், நூற்றாண்டுவரை அறிவுவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பெளத்தம் முதலிய மதங்கள் தமிழகத்தில் வேரூன்றி நின்றன. அவர்கள் அறிவுவாதம் மூளைக்கு வேலை கொடுத்தது. வேதத்தை அடிப்படையாகக் கொண்ட வைதிக சமயிகள், யாகம் முதலிய கிரியை களில்மட்டுமே பெருங்கவனத்தைச் செலுத்தினர். பல்லவர் காலத்திய பெரும்பான்மையான நிலை இதுதான். முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் நாவுக்கரசர் பெருமானால் பக்தி மார்க்கம் என்பது மிக வேகமாகப் பரவலாயிற்று. வெறுங் கிரியைகள் செய்வதையும் அறிவுவாதம் செய்வதையும் அவர் சாடினார்; இதன் விரிவு பின்னர்ப் பேசப்படும்) இவை இரண்டிற்கும் அப்பாற்பட்டு உள்ள பக்தி நெறியின் சிறப்பை விரிவாகப் பாடினார். 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருஞான சம்பந்தர் தோன்றி, பக்தி இயக்கத்தைப் பெரும் புயலாக வளர்த்தார். அறிவுவாதத்தால் இறைவனை அறிய முடியாது என்பதை ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா, சுடர் விட்டுளன் எங்கள் சோதி (திருமுறை 3.54,5) என்ற புதிய கருத்தையும் ஞானசம்பந்தர் வெளியிட்டார்.