பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 149 பெண் தன் (தம்பியிடம் தந்தை வீட்டில் இருக்கின்றவரை காட்டுகின்ற அன்பிற்கும் கணவன் வீடு சென்றபின் காட்டுகின்ற அன்பிற்கும் வேறுபாடு உண்டு. ஒருவேளை திலகவதியார் மணமுடிந்து கலிப்பகையாருடன் சென்றிருப்பின் மருள்நீக்கியார் மாட்டுப் பழைய அன்பைச் சொரிதல் இயலாத காரியம். அப்படி மணமுடித்துச் சென்றபின் தாய் தந்தையார் இறந்திருப்பின் மருள்நீக்கியாரைக் கணவன் வீட்டிலிருந்தபடியே கவனித்துக்கொள்ள முடியுமே தவிர, உடனிருந்து அன்பு செய்தல் இயலாத காரியம் நிலைமை மாறிவிட்டமையின் தம்பியாருடன் ஒரே வீட்டில் இருக்கின்றார் எனினும் கணவனுடன் உயிர் துறக்க வேண்டும் என்ற கொள்கையை அவர் விட்டுக்கொடுத்ததுத் தம்பி மாட்டு ஏற்பட்ட அன்பால் அன்று, கைம்மாறு கருதாத அருளாலேயே ஆகும். இவ்வளவு இளமைப் பருவத்தில் அடுக்கிவந்த இத்துணை மாபெரும் துயரங்களைச் சந்தித்த பிறகு திலகவதியார் இம்பர்மனைத் தவம் புரிந்து வாழத் தொடங்கினார் என்றால், அன்பின் முதிர்ந்த நிலையாகிய அருளுடை மையால்தான் முடியும். . . . . , இரண்டாவதாகக் காண வேண்டியது. இவ்வளவு இளமைப் பருவத்தில் அடுக்கி வந்த துன்பங்களால் மனமெர்டிந்துபோகாமல், வாழ்க்கையில் வெறுப்புக் கொள்ளாமல், தன் நிலையை நினைந்து நொந்து போகாமல் உறுதியுடன் வாழ்வது எளிதான காரியம்