பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சேக்கிழார் தந்த செல்வம் அன்று. அப்படி வாழவேண்டுமேயானால் அதற்குரிய ஒரே வழி, шт6йт எனது என்ற அகங்கார மமகாரங்களை அறவே ஒழித்துவிட்டு அனைத்து உயிர்களிடத்தும் அருள் பூண்டு வாழ்வதே ஆகும். திலகவதியார் இதனையே செய்தார் என்பதை அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி’ என்ற சொற்களால் குறிப்பிடுகிறார். அடுத்து, இம்பர்மனைத் தவம் புரிந்து, என்று கவிஞர் கூறுவது ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது. மனை வாழ்க்கை என்பது ஒன்று: மனைத்தவம் என்பது மற்றொன்று. கணவனோடு கூடி LᏝ)ᏊᏈ) ☾Ꭲ வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள், இயல்புடைய மூவர்க்கும், விருந்தினர்க்கும், சுற்றத்தார்க்கும் பயன்பட வாழ வேண்டும். இல்லறத்திற்கு உரிய கடமை தொடர் புடையார்மாட்டுபட செய்வதேயாகும். இவை அனைத்தும் அன்புடைமை என்றே கூறப்படும். அருளுடைமை இதற்கு அப்பாற்பட்டதாகும். தொடர்புடைய சுற்றத்தார், நண்பர், விருந்தினர், பகைவர், நொதுமலர் (Siange) என்பவர்களிடம் வேறுபாடு பாராட்டாமல் காட்டப்படுவது அருள் என்று கூறப்படும். மனையில் தங்கி வாழ்ந்த திலகவதியார், தம்பிக்காகமட்டும் வாழ்ந்திருப்பின் அது சோதர அன்பு அல்லது சோதர பாசம் எனப் பட்டிருக்கும். அவ்வாறில்லாமல் தம்பி என்ற உறவைப் பெரிதாகப் பாராட்டாம்ல் அனைத்து உயிர்களிலும் அவரும் ஓர் உயிர் என்ற எண்ணத்தோடு வாழ்ந்தார்